ஊடகங்கள் மட்டும் தான் காரணமா ? நாம ?
ஊடகங்கள் மட்டும் தான் காரணமா ? நாம ?
அந்த தொலைக்கட்சியில் இந்துக்களை பழிக்கிறார்கள், இந்த தொலைக்காட்சியில் தாலியை (பெண்கள் அணியும் தாலியை) அவமதிக்கிறார்கள் என்ற வலைப்பதிவுகள் வந்த வண்ணம் இருக்கின்றன.
இத்தகைய செய்திகளுக்கு என் பொதுவான பதில் - முதல் பாகம் :
1.1. ஊடகங்களும், சட்டமும் ஹிந்துக்களுக்கு எதிராய் வளர்ந்துகொண்டு / பேசிக்கொண்டு இருக்கின்றன, என்ற எண்ணத்தை நான் ஓரளவு மட்டுமே ஒப்புக்கொள்ளாத் தயார்…
1.2. தாலி அணிவது மட்டுமா ?
- விவாகரத்து
- கருக்கலைப்பு (அபார்ஷன் )
- முறையற்ற பால் உறவு (Sex before marriage)
- கற்பில்லா வாழ்க்கை (adultry / live in etc)
- முதியோரை வீட்டை விட்டு விரட்டுவதை (elder abuse) ………ஏதோ கடையில் காபியோ பிட்சாவோ ஆர்டர் பண்ணுவது போல சகஜமாக்கி இந்திய / ஹிந்து பாரம்பர்யத்துக்கு வேட்டு வைப்பதோடு .. பல இந்துக்குடும்பங்களை சீர் அழிக்கின்றனர் இதே ஊடகங்கள் என்ற எண்ணத்தையும்
1.3. பள்ளிகளில் கருத்தடை சாதனங்கள் வழங்குவது பற்றி நடந்த / நடக்கும் விவாதத்திலும் ஊடகங்கள் விளையாடின என்ற எண்ணத்தையும்
1.4. சமீபத்தில் இ. பி கோ 377 க்கு எதிரான சிறிய போராட்டங்களுக்கு முழு வலிவும் முழு வெளிச்சமும் கொடுத்தன் ஊடகங்கள் …. இவை எல்லாம் ஒரே குறிக்கோளுடன்…அதாவது இந்து எதிர்ப்பு குறிக்கோளுடன் என்ற எண்ணங்களை நான் ஓரளவு மட்டுமே ஒப்புக்கொள்ளத் தயார்
5. இந்த சீரழிவுகளுக்கு நாமே - அதாவது இந்துக்களே முதல் காரணம் என்று நான் சொல்லுகிறேன்
நாம் முன்னேற நாம் மாற வேண்டும்….. இல்லை …இல்லல நாம் தப்பிக்க நாம் மாற வேண்டும் என்ற நிலைமையில் உள்ளோம்
6. ஏன் இப்படி சிந்திக்கிறேன்... உதாரணங்கள் ...
- ஷஹபானோ கேசை எடுத்துப்ப்பாருங்கள் : சுப்ரீம் கோர்டென்ன, மத்திய அரசென்ன ? யார் வந்தாலும் எங்கள் தனி மனித (விவாக / விவாகரத்து / வீட்டு) சட்டங்களில் யாரும் தலையிட முடியாது என்று … இருதியாக …. உறுதியாக ஒரு சிறுபான்மை சொன்னது … சொன்ன வார்த்தையை காக்க போராடியது …. அந்த மாதிரி ஒரு நிலைப்பாடு எடுக்க இந்துக்கள் தயாரா ? நிலைப்பாடை உறுதிசெய்ய இந்துக்கள் சாத்வீகமான விதத்தில் போராட தயாரா ?
- …. தப்போ சரியோ..என் வீட்டு விஷயங்களில் நீ தலையிடாதே.. அதை நான் பார்த்துக்கொள்கிறேன்… உன் வேலையை நீ பார் என்று அந்த சிறுபான்மையினர் தெளிவாய், எளிதாய் சொன்னார்களே…… இதை சொல்ல இந்துக்கள் தயாரா ?
- சரி இதெல்லாம் போகட்டும்….. ஸ்டார் டீவியோ… இல்லை எந்த மண்ணாங்கட்டி டீவியோ, ஹிந்துக்கள் மிகவும் புனிதமாய் போற்றும் தாலியை அவமத்தித்தார்கள் என்று சொல்லி பல வலைப்பதிவுகள் ...மடல்கள் வந்த வண்ணம் இருக்கின்றன..... ஆனால் அதே தொலைககாகட்சியில் தாலியை கயட்டி காண்பித்த அந்த தாலியுடன் வந்த ஹிந்துப் பெண்ணை ஒரு பைட்டக்கோ…..அல்லது பொதுக்கூட்டமோ போட்டு இந்துக்களால் தண்டிக்க அல்ல ….குறைந்த பட்சம் கண்டிக்க (censure செய்ய ) முடியுமா ? மதத்தை விட்டு ஒதுக்க முடியுமா ? சத்தியமாய் முடியாது ….. ..
- இந்த செய்திகளையே பாருங்கள்….. ராம் ஜேத்மலானி, அருண் ஜெயிட்லி என்று வக்கீல் பிரபலங்கள் ஒரு பட்டியலே இருக்கும் தாய் நாட்டில் நாட்டில், யாரோ பாவம், ஒரு சென்னை வக்கீல் விஜை டீ வீக்கு நோட்டீஸ் விட்டு இருக்கிறார்…. இவர் நோட்டீசை ஆதரித்து எத்தனை இந்துக்கள் மவுன ஊர்வலம் போகப்போகிறார்கள் ? எத்தை இந்துக்கள் கோர்ட்டின் முன் மவுன ஊர்கோலம் போவார்கள் ?
8. கலாசாரம் தான் இந்தியாவின் ஆணிவேர்……அதை காக்க நாம் அமைதியான வழியில் போராட தயாரா ?
- வடக்கே பூஜா என்ற ஒரு இந்துப் பெண் தெருவில் அறைகுறை ஆடையுடன் நடந்து போனாள்…..செய்தி படித்து இருப்பீர்கள் ……கடைசியில் பார்த்தால் அவளுக்கு மூளையில் கோளாறு என்றனர்…. உண்மை தெரியும் முன் அவளுக்கு ஆதரவுக்கு போனது யார் ? ஹிந்துக்களா …இல்லை மற்றவர்களா ? இந்த அலங்கோல ஆட்டம் மற்ற சிறுபான்மையில் நடக்குமா ? நடந்தால் அந்தப் பெண் அந்த மததில் இருக்க முடியுமா ?
- ஊரெல்லாம் பேசியென்ன … நம் சென்னை family courtக்கு ஒரு தடவை போய் பாருங்கள் … எத்தனை ஹிந்து கேஸ்கள், எத்தனை சிறுபான்மை கேஸ்கள் என்று பாருங்கள் … உடகம் என்ன ஊடகம் … உள்ளே நம் சரக்கு இருக்கும் நிலை தெரியும் ….- ஊடகம் சொல்லியா ஒருத்தொருத்தியும் அலிமணி கேட்டு புருஷன் மீதும் மாமியார் மீதும் …வயதான மாமனார் மீதும் கேஸ் போடுகிறாள் ? ஊடகம் சொல்லியா நிஜ வாழ்வில் கோர்ட்டில் ஹிந்து பெண்களும் ஹிந்து வக்கீல்களும் *ஹிந்துக்களின்* தா….யை அறுக்கிறார்கள் ????….
9. என்ன சொல்ல நண்பர்களே….. நாம் முன்னேற நாம் மாற வேண்டும்….. இல்லை …இல்லல நாம் தப்பிக்க நாம் மாற வேண்டும் என்ற நிலைமையில் உள்ளோம்
10. இந்த பதிவை முடிக்கும் முன் சில விளக்கங்கள் :
- நானும் லயன்ஸ் டேட்ஸ் இம்பெக்ஸுக்கு நேற்று ஒரு மென் மடல் எழுதியுள்ளேன்…எதிர்ப்பையும்..வேதனையும் தெரிவித்துள்ளேன்….
- இந்த பிரெச்சனையை சட்ட ரீதியாய் கோர்டுக்கு கொண்டு செல்போருக்கு என் வணக்கமும் நன்றியும்.
- ஆகா அவர் கம்யூனிஸ்டு, இவர் பெமினிஸ்டு ….. இவர் இந்து எதிரி அவர் இந்து எதிரி என்கிறோம்….. அது ஏன் சார் …பெமினிஸ்டும் …அல்ட்ரா பெமினிஸ்டும் 100க்க்கு 90 சதவிகிதம் இந்துக்களாய் இருக்கின்றனர் ???
- இந்த டீவி ஒளிபரப்பில் தாலியை கைய்யில் பிடித்துக்க்க்கொண்டு இருக்கும் பெண் என்ன சிறுபான்மையா ? அமேரிக்காவில் இருந்து வந்தாரா ?
- புருஷனுக்குத்தான் மதிப்பில்லை…. புருஷன் சம்பாதித்துபோடும் மெஷின் என்று இந்த அம்மா நினைத்தால் தாலியை ஏன் கட்டிக்கிட்டார் ? யாராவது இவரை கட்டடாயப்படுத்தி இந்துவாய் …தாலி கட்டிய இந்துவாய் இருக்க சொன்னார்களா ? இந்த பொம்பளை யார் ? இவரை நாம் கண்டித்தோமா ? …. யாராவது கேட்பார்களா என்று பார்த்தேன்… யாரும் கேட்டதாய் தெரியவில்லை … நான் கேட்டேன்
- ஏதோ ஒரு சேனலில் தாலி கயட்டியதுக்கு இத்தனை லெட்டர் போடுறோமே, தாலி தார்காலீகமாய் ஒரு தொலைக்கட்சியில் மட்டுமல்ல, கோர்ட்டில் பல ஆயிரம் கேஸ்களில் தாலி எடுக்கப்படுகிறது …. ..குடும்பங்கள் சீரழிகின்றன…. முதிய பெற்றோர்கள் …தெருவில் நிற்கின்றனர் …. இவை பெரும்பாலும் இந்துக்களிலேயே நடக்கிறது …. தகப்னை அறியாப் பிள்ளைகள் ((விவாகரத்தினால்) உருவாகின்றனர் ....இதெல்லாம் கலாசாரத்துக்கு எதி இல்லையா ?..இதை யார் தட்டிக்கேட்பது ?
- You should become the change you wish to see…. என்பதே என் நம்பிக்கை
- 300 … 400 ஆண்டுகள் நம்மை பலரும் ஆண்டனர். இந்து மதத்துக்கு எதிர் என்று பகிரங்கமாய் இருந்தவர்கள் ஆண்ட பல நூற்றாண்டுகளை தேவாரமும் திருவாசகம் பிரபந்தங்களும் வேதமும் கோயிலகளும் ஆயிரம் கால் மண்டபங்களும் தாண்டி வந்துவிட்டன…. …. இன்றைய தாலி கழட்டும் அவலத்தை …. கோர்ட்டு கோர்டாய் குடும்பங்கள் நிற்கும் அவலத்தை நாம் நல்லபடியாய் தாண்டுவோமா என்ற என் ஆதங்கம் தான் என் பதிகளாய் வெளிப்படுக்கின்றன….
...என் பார்வைக்கோணத்தில் தப்பிருந்தால் சொல்லுங்களேன்
அன்புடன்
சுப்பு

2 comments:
視訊美女,豆豆聊天室,微風成人,情色,視訊聊天室,ut聊天室,聊天室,正妹牆,全民愛愛區,情色文學,正妹計時器,自拍貼圖,視訊交友,玩美女人,嘟嘟成人,哈比寬頻成人,貼圖區,色情小遊戲,同志聊天室,ut聊天室,美女寫真,嘟嘟貼圖區,成人論壇,巨乳,上班族聊天室,成人遊戲,情色a片,美女遊戲,情色自拍,漫畫貼圖,成人電影,成人文學,視訊,情色論壇,聊天,免費視訊,666成人,情色a片,成人遊戲,上班族聊天室,
0401遊戲線上0401免費視訊聊天室0401免費視訊聊天室成人成人聊天室成人成人交友影音視訊視訊聊天影音視訊美女聊天聊天交友視訊聊天交友視訊聊天網0204貼圖免費色情電影視訊聊天網0204免費下載一夜情666成人光碟
Post a Comment