Every year 1000s of innocent Indian husbands are charged with false DOWRY cases. Their innocent parents, young sisters & mothers are arrested, jailed without warrant. Some have died. Some have committed suicide unable to bear injustice. The law that was made to protect vulnerable women is being misused by unscrupulous women with connivance of others

Monday, March 16, 2009

வக்கீல்கள் வராவிட்டால் வழக்குகள் தள்ளுபடி!


வக்கீல்கள் வராவிட்டால் வழக்குகள் தள்ளுபடி!

சனிக்கிழமை, மார்ச் 14, 2009, 10:31 [IST]

சென்னை: திங்கள்கிழமை முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து நீதி்மன்றங்களிலும் வழக்கு விசாரணைகளைத் தொடங்க வேண்டும். வக்கீல்கள் வராவிட்டால் வழக்கின் தன்மையைப் பொறுத்து அவற்றை டிஸ்மிஸ் செய்யலாம் என உயர்நீதிமன்றப் பதிவாளர் மாலா உத்தரவிட்டுள்ளார்.

இலங்கை பிரச்சினை, குற்றவியல் நடைமுறை திருத்த சட்டம் ஆகியவற்றுக்காக கடந்த ஜனவரி மாதம் 30ம் தேதி முதல் கோர்ட் புறக்கணிப்பை வக்கீ்ல்கள் நடத்தி வந்தார்கள்.

கடந்த மாதம் 19ம் தேதி புறக்கணிப்பை கைவிட்டு, பணிக்கு திரும்பினார்கள். ஆனால் அன்றைய தினம் பிற்பகல் உயர்நீதிமன்ற வளாகத்திற்குள் வக்கீல்கள், போலீசார் இடையே மோதல் ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வற்புறுத்தி வக்கீல்கள் கோர்ட்டுகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள். இதனால் தமிழ்நாடு முழுவதும் உள்ள கோர்ட்டுகளில் வழக்கு விசாரணை பெரிதும் பாதித்துள்ளது.

இந்த நிலையில், உயர்நீதிமன்ற பதிவாளர் ஜெனரல் ஆர்.மாலா ஒரு அறிவி்ப்பை வெளியிட்டுள்ளார்.

அதில் கூறப்பட்டிருப்பதாவது:

16ம் தேதி முதல் கோர்ட்டுகளில் வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்; வழக்கின் தன்மை மற்றும் தகுதிக்கு (மெரிட்) ஏற்ப அவற்றில் முடிவு எடுக்கப்படும் என்ற தகவலை, தமிழகத்தில் உள்ள கிரிமினல், சிவில் கோர்ட்டுகள் மற்றும் தீர்ப்பாயங்கள் அனைத்தும், 14ம் தேதி அந்தந்த நோட்டீஸ் பலகையில் வெளியிட வேண்டும்.

கிரிமினல் வழக்குகளில் வக்கீல்கள் வரவில்லை என்றால் 'அமீகஸ் கொரி' வக்கீல் பட்டியல் அல்லது இலவச சட்டப்பணிகள் ஆணைக்குழு பட்டியலில் உள்ள வக்கீல்களை, குற்றம் சாட்டப்பட்டோர் தரப்பில் ஆஜராக கேட்டுக் கொள்வது தொடர்பாகவும் நோட்டீஸ் பலகையில் தகவல் வெளியிட வேண்டும்.

வழக்கில் ஆஜராவதற்காக மாற்று ஏற்பாடுகளை செய்யும்படி குற்றம்சாட்டப்பட்டோருக்கு (ஜாமீனில் இருப்பவர் கள் மற்றும் ஜெயிலில் இருப்பவர்கள் அனைவருக்கும்)நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் வக்கீல்களுக்கு உயர்நீதிமன்றம் மறைமுகமாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

வேலைநிறுத்தப் போராட்டத்தைக் கைவிட வேண்டும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா கமிஷன், முதல்வர் கருணாநிதி உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் வேண்டுகோள் விடுத்தும் வக்கீல்கள் அதை சட்டை செய்யாமல் உள்ளனர்.

தமிழக டிஜிபி, போலீஸ் கமிஷனர் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகளை மாற்றினால்தான் பணிக்குத் திரும்புவோம் என அவர்கள் பிடிவாதமாக கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


source
http://thatstamil.oneindia.in/news/2009/03/14/tn-cases-to-be-dismissed-if-lawyers-dont-show-up.html

0 comments: