வேலூர் கோர்ட்டில் மர்ம கும்பல் திடீர் தாக்குதல். அரசு கூடுதல் வக்கீலின் அறை கண்ணாடி கதவு உடைப்பு
வேலூர் கோர்ட்டில் மர்ம கும்பல் திடீர் தாக்குதல். அரசு கூடுதல் வக்கீலின் அறை கண்ணாடி கதவு உடைப்பு
வேலூர், மார்ச்.15-
வேலூர் கோர்ட்டில் அரசு கூடுதல் வக்கீலின் அறை கண்ணாடி கதவு மர்ம நபர்களால் உடைக்கப்பட்டது.
வேலூரில் நேற்று முன்தினம் பணிக்கு திரும்பிய தி.மு.க. வக்கீல்கள் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்ட வக்கீல்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் சிலர் காயம் அடைந்தனர். இந்த நிலையில் நேற்றும் தி.மு.க. வக்கீல்கள் கோர்ட்டுக்கு சென்று தங்களது பணிகளை மேற்கொண்டனர்.
கண்ணாடி கதவு உடைப்பு
இதற்கிடையில் வேலூர் கோர்ட்டின் கீழ் தளத்தில் உள்ள வேலூர் கூடுதல் அரசு வக்கீல் மு.மு.பார்த்திபனின் அறை முன்பு இருந்த பெயர் பலகை உடைக்கப்பட்டு, கோர்ட்டுக்கு வெளியே உள்ள வளாகத்தில் தூக்கி வீசப்பட்டு கிடந்தது. மேலும் அவரது அறை கதவு கண்ணாடிகள் உடைக்கப்பட்டு இருந்தன. இதுகுறித்து வக்கீல் மு.மு.பார்த்திபன், மாவட்ட நீதிபதி கலையரசனிடம் புகார் மனு கொடுத்தார்.
இதுகுறித்து தி.மு.க. மாவட்ட அவைத்தலைவர் முகமது சகி கூறியதாவது:-
வக்கீல்கள் ஆலோசனை கூட்டம்
பணிக்கு திரும்பிய தி.மு.க. வக்கீல்கள் 11 பேர் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இதுகுறித்து எங்களுக்கு எந்த தகவலும் வரவில்லை. உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மறுத்தால், அது கோர்ட்டை அவமதிக்கும் செயலாகும். எனவே வருகிற திங்கட்கிழமை முதல் அனைத்து வக்கீல்களும் கோர்ட்டு புறக்கணிப்பை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும்.
தி.மு.க. வக்கீல்கள் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டது குறித்து, நாளை (இன்று) 15-ந் தேதி மாலை 3 மணி அளவில் பேபி ரெசிடன்சியில், மாவட்ட தி.மு.க. செயலாளர் ஆர்.காந்தி எம்.எல்.ஏ. தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இதில் மாவட்டம் முழுவதும் உள்ள தி.மு.க. வக்கீல்கள் கலந்துகொள்வார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
தி.மு.க. வக்கீல்கள் கோர்ட்டுக்கு சென்று வந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, கோர்ட்டு புறக்கணிப்பு செய்து வரும் வக்கீல்கள் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பினர்.
source
http://www.dailythanthi.com/article.asp?NewsID=475002&disdate=3/15/2009&advt=2

0 comments:
Post a Comment